காலி கடலில் சிக்கிய மர்மம்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

அண்மையில் காலி கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலி கோட்டைக்கு அருகிலுள்ள கடற்கரையில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் தெளிவான கடலில் 5 அடி ஆழத்தில் சிலை கிடைத்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த சிலை தொடர்பில் மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன..

இதற்கு முன்னர் காலி கோட்டைக்கு அருகில் இருந்த சிலரால் இந்த சிலை தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

அதற்கமைய குறித்த சிலை, காலி கோட்டை பிரதேசத்தில் கலை தொழிலில் ஈடுபடுகின்ற நபர் ஒருவரினால் வர்த்தக நோக்கத்தில் கடலில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சிலை புராதன சொத்தாக இருக்க முடியாதென வரலாறு மற்றும் தொல்பொருள் பேராசிரியர் டீ.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.

அது தேவி சிலையாக அடையாளப்படுத்தக் கூடிய போதிலும், அதன் தலை, முகம் மற்றும் நெற்றி பகுதி மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதனால் அதனை வழிப்பாடு பொருளாக எடுத்து கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கண்காட்சி பொருளாகவும், அவ்வாறான சிலைகள் நிர்மாணிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அங்கிருந்த இளைஞர் பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில்,

காலி கோட்டை பகுதியில் நான் செல்லாத இடம் ஒன்று இல்லை. அந்த சிலை பல மாதங்களாக அங்கிருந்தது. அந்த சிலையை கலை வரைபடங்கள் விற்பனை செய்யும் ஒருவரே அவ்விடத்திற்கு கொண்டு சென்றிருந்தார். அந்த சிலையை நான் கண்டவுடன் அதனை அங்கு கொண்டு சென்றது யார் என கோபப்பட்டேன். அது மாத்திரமல்ல மக்கள் இதனால் ஏமாற்றப்படலாம் என நான் அதனை கொண்டுவந்தவரிடம் கூறினேன். எனினும் அதனை அவர் கண்டுக்கொள்ளவில்லை. பவளப் பாறைக்குள் சிலையை வைத்து அதனை பழையது போன்று காட்டுவதற்கும் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதும் அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். இந்த சிலையை நான் முதலில் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை எனது பேஸ்புக் பக்கத்தில் பார்த்து கொள்ளக் முடியும். உரிமையாளர் கூறியதற்கமைய இது சீமெந்தில் செய்த ஒன்றாகும். உரிமையாளர் எனது நண்பராக இருந்த போதிலும், சிலையின் முழுமையான நிர்மாணிப்பது குறித்து எனக்கு விழிப்புணர்வு இல்லை. எப்படியிருப்பினும் இது கப்பலில் இருந்து விழுவும் இல்லை, கடவுள் போடவும் இல்லை... என குறிப்பிடப்பட்டிருந்தது.

you may like this video..