புலிகளால் புதைக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீட்பு

Report Print Mohan Mohan in சமூகம்

கிளிநொச்சி - தருமபுரம், புளியம்பொக்கனை, விடத்தையடி பகுதியில் உள்ள தோட்டக்காணியில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிகள் துருப்பிடித்து காணப்படுவதினால் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விவசாயி ஒருவர் தனது தோட்டக்காணியை உழுதபோது மண்ணில் புதைந்த நிலையிலேயே குறித்த ஏ.கே ரீ 56 ரக துப்பாக்கிகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.