தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதான பணிகள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்றைய தினம் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றபோது விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இந்த சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அன்னை பூபதியின் நினைவு தினத்தை எங்களின் அனுமதியில்லாமல் யாரும் அனுஸ்டிக்கக்கூடாது என அன்னை பூபதியின் குடும்பத்தினர் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இந்த சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை வெறும் அரசியல் நோக்கம் என கருதாது தமிழர்களின் தாயக விடுதலைக்காக ஒப்பற்ற தியாகம் செய்த அன்னை பூபதியின் நிகழ்வுகளின் முன்னாயத்த வேலைகளுக்காக இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது கருத்துத் தெரிவித்த சபையின் பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

குறித்த சிரமதான நிகழ்வின்போது, மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்ட மாநகர சபையின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.