இலங்கை வந்த வெளிநாட்டு பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

இத்தாலி நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹஷிஸ் என்ற போதை பொருளுடன் குறித்த இத்தாலி நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 5 கிலோ 272 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபா என சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest Offers