ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தின் புதிய முயற்சி - பலரும் பாராட்டு

Report Print Murali Murali in சமூகம்

நுவரெலியா, வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹைபொரஸ்ட் இல - 3 தமிழ் வித்தியாலயத்தில், புதிய முயற்சியாக “மாதிரி உழைப்பாளர் தினம்” மாணவர்களின் பங்களிப்புடன் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை முதல்வர் திலகேஸ்வரன் தலைமையில் கடந்த இரண்டாம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், இதில் மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வானது உழைப்பாளர் தினத்தின் தாற்பரியத்தையும், மகத்துவத்தையும் குறித்த பிரதேச பெற்றோர்களுக்கும், இளம் சமூகத்தினருக்கும் தெளிவூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உழைப்பாளர் தின நிகழ்வுகள் உழைப்பாளர்களை கௌரவப்படுத்தும் தொனியில் அமைவதை வலியுறுத்தியும், எவ்வாறு இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு விளக்கியிருந்தது.

குறித்த நிகழ்வுக்கான வீதிநாடகங்கள், நாட்டார் பாடல்கள், நடனங்களை பாடசாலையின் ஆசிரியர் சரத்பாபு நெறியாள்கை செய்திருந்தார்.

இதேவேளை, மிகவும் பின்தங்கியப் பகுதியில் இயங்கி வரும் குறித்த பாடசாலையின் இந்த புதிய முயற்சிக்கு, சமூக ஆர்வளர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.