புகையிரதக் கடவையில் கடமையில் உள்ள பொலிஸார் அசமந்தம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா குட்செட் வீதி ஆலடி புகையிரதக் கடவையில் கடமையில் இருக்கும் பொலிஸார் அசமந்தப்போக்கைக் கடைப்பிடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

குறித்த பகுதியில் உள்ள புகையிரதக் கடவையின் அருகே காவலரண் அமைத்து பொலிஸார் கடமையில் இருக்கின்ற போதும் புகையிரதம் வரும் போது கடவையில் உள்ள மறியலை போடாது அசமந்தமாக செயற்படுகின்றனர்.

இதனால் பலரும் புகையிரதம் வருவதை அவதானிக்காது செல்வதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.