மன்னாரில் மின்னல் தாக்கி மூன்று வீடுகள் சேதம்

Report Print Ashik in சமூகம்
101Shares

மன்னாரில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் இடி மற்றும் மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டு 3 வீடுகள் சேதமாகியுள்ளன.

மூதூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன.

வீடுகளில் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோதே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்தின் பின்னர் மன்னார் பொலிஸார், இராணுவத்தினர், பிரதேசச் செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.