லெஸ்டரின் தங்க மயில் விருதை கொள்ளையடித்த அறுவர் கைது!

Report Print Aasim in சமூகம்
172Shares

சிங்கள சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் காலஞ்சென்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருதைத் திருடிய குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல சிங்கள சினிமா இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளின் போது அவரது வீட்டில் இருந்த சர்வதேச திரைப்பட விழாவொன்றில் வழங்கப்பட்ட தங்க மயில் விருது திருடப்பட்டிருந்தது.

அத்துடன் லெஸ்டரின் தூரத்து உறவினரான பெண்ணொருவரின் பெறுமதி மிக்க கைத்தொலைபேசியும் காணாமல் போயிருந்தது.

கடந்த சனிக்கிழமை திருடப்பட்ட தங்க மயில் விருது கொள்ளுப்பிட்டி-கடுவலை இடையே சேவையில் ஈடுபடும் 177 வழித்தட தனியார் பேரூந்து ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விருது மற்றும் தொலைபேசியை திருடிய சந்தேகத்தின் பேரில் ஆறுபேர் தற்போது பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் முச்சக்கர வண்டிச் சாரதியொருவர், தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் மற்றும் முடிச்சுமாறி ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் பம்பலப்பிட்டி பொலிசார் விசாரணைகளை ​மேற்கொண்டுள்ளனர்.