நாளை முதல் இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்

Report Print Dias Dias in சமூகம்

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.

வேதன முரண்பாடுகள் திருத்தம் தொடர்பில் அதிகாரிகள் இதுவரை உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காததால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை , மின்சார பொறியியலாளர்கள் நாளைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணியில் ஈடுபடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இதன்காரணமாக, மின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுவதுடன், இதன் காரணமாக பொதுமக்கள் சிக்கலுக்குள் உள்ளாக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.