மட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வுகள்

Report Print Kumar in சமூகம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வுகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று எனும் தலைப்பில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

இந்த மேதின நிகழ்வு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதி தலைவர் இரா.துரைரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விவசாயிகள், மீனவர்கள், கால்நடை பண்ணையாளர்கள், ஆசிரியர்கள், உள்ளூராட்சிசபை தொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள், தொண்டராசிரியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.