இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவாளர்களுக்கு இடையே இன்றைய தினம் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியியல் தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு அருகில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை நுவரெலியாவில் இ.தொ.காவின் மேதினம் இடம்பெற்றது.

இதன்போது ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு பேருந்தில் சென்ற இ.தொ.கா ஆதரவாளர்கள் கோஷமிட்டதாகவும், இதனை எதிர்த்து த.மு.கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் அவர்களை மறைத்து வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதால் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவத்தை அறிந்த கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து இரு கட்சியினர்களுக்கிடையில் இடம்பெறவிருந்த பாரிய மோதலை தடுத்து சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.