வவுனியாவில் பனை வளத்தை காப்போம்: விழிப்புணர்வு நிகழ்வில் இளைஞர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்
45Shares

வவுனியாவில் பனைவளத்தை காப்போம் என்னும் தொனிப்பொருளில், வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளது.

வவுனியா, நெளுக்குளம் பிள்ளையார் ஆலயம் அருகே உள்ள பனந்தோப்பு பகுதியில் பகுதியில் குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகின்ற பனை வளம் அழிக்கப்பட்டு வருவதால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலை ஏற்பட்டு வருகின்றது.

அதை நம்பிய குடும்பங்களின் சுயசார்ப்பு பொருளாதார கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது. இதனால் பனைவளத்தை காத்து எமது இருப்பை பாதுகாப்போம் எனத்தெரிவித்தே இளைஞர்கள் இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்தொடர்ச்சியாக வடக்கு இளைஞர்கள் பலர் ஒன்று கூடி மன்னார், நானாட்டான் பகுதியில் நுங்குத் திருவிழா என்னும் பெயரில் பனைசார் உற்பத்திப் பொருட்கள், பனம்பொருட்களுடன் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.