வவுனியா பொதுவைத்திய சாலையில் இரத்த தானம் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்னம் 32வது நினைவேந்தலை முன்னிட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு சிறிரெலோ இளைஞரணியினால் நேற்று வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் சிறிரெலோ இளைஞரணியின் தலைவர், செயலாளர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி வைத்துள்ளனர்.