வறட்சியிலும் தொடர்கின்றது கூழாமுறிப்பு விவசாயிகளின் முயற்சி

Report Print Mohan Mohan in சமூகம்
70Shares

முல்லைத்தீவில் தொடரும் வறட்சியான காலநிலையால் விவசாயிகள் மற்றும் கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள கூழாமுறிப்பு கிராம மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்வாதாரப் பயிர் செய்கையினை பாதுகாத்து வருகின்றனர்.

இவர்கள் தமது வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளுக்கு கிணற்றில் உள்ள நீரை நீர்பம்பிகள் மூலம் இறைத்து பாதுகாத்து வருவதாகவும் இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ள காரணத்தினால் குறித்த கிராமத்தில் காணப்படும் கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.