வடக்கு ஆளுநர் மட்டக்களப்பிற்கு விஜயம்

Report Print Kumar in சமூகம்
57Shares

வடமாகாண ஆளுநர் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை இன்று திங்கட்கிழமை சிநேகபூர்வமான முறையில் மேற்கொண்டார்.

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரசித்திபெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஆலய பரிபாலனசபையினருடன் சிநேகபூர்வமான சந்திப்பினையும் மேற்கொண்ட ஆளுநர், அவர்களுடன் கலந்துரையாடினார்.

வடமாகாண ஆளுநராக அண்மையில் இரண்டாவது தடவையாக பொறுப்பேற்றுக்கொண்ட வடமாகாண ரெஜினோல்ட் குரே முதன்முறையாக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படும் மாமாங்க தீர்த்தக்கேணி புனரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள், ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன் மற்றும் ஆளுநரின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.