மைத்திரியின் மே தின கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Report Print Navoj in சமூகம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேதின கூட்டத்தை மட்டக்களப்பு மாவடிவேம்பில் நடாத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே தினக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மித்த பகுதியில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எமது வேதனையை உணராது, எமக்கான நீதியை பெற்றுத்தராது, தாங்களும் கட்சியும் இணைந்து எங்கள் பிரதேசத்திலேயே மே தினத்தை மகிழ்வாக கொண்டாடுவதை கண்டிக்கிறோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேன தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, மாவடிவேம்பில் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.