இலங்கை சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களினால் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி மே தினத்திற்கு ஆதரவாகவும், ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சதிஸ்காந்த் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இலங்கை சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் இந்த முறை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி மாவடிவேம்பு பிரதேசத்தில் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மேதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பங்கேற்றுள்ளதுடன், இலங்கையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.