நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவுக்கு பொலிஸார் அழைப்பாணை

Report Print Aasim in சமூகம்
50Shares

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான திலும் அமுனுகம தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக செயற்படுகின்றார்.

அண்மையில் கண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவத்தின் போது திலும் அமுனுகம பின்னிருந்து செயற்பட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கண்டி மாவட்டத்தின் இனவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் தீவிரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், திலும் அமுனுகமவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

இதற்காக எதிர்வரும் 10ம் திகதி அவரை பொலிஸ் தலைமையகத்துக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.