வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கையர்களின் தற்போதைய நிலை

Report Print Murali Murali in சமூகம்
289Shares

மலேசியாவில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இரு வேறு சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு செல்ல முற்பட்ட நிலையில் 131 இலங்கையர்களை மலேசிய பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 127 பேர், 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜோஹோர் பாரு மாகாணத்தில் உள்ள பீகன் நேனாஸ் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய நான்கு பேரும் 2007ஆம் ஆண்டின் ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான, மற்றும் குடியேற்றவாசிகள் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், மலேசிய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இணைந்து பணியாற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.