இலங்கை சிறுமியின் வாழ்வை மாற்றியமைத்த கேரள பெண்

Report Print Arbin Arbin in சமூகம்

இலங்கையில் தலசீமியா என்ற விசித்திர நோயால் அவதியுற்று வந்த 7 வயது சிறுமியின் வாழ்க்கையை இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள பெண் மருத்துவர் ஒருவர் அடியோடு மாற்றியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி நகரத்தைச் சேர்ந்த மருத்துவர் கணமணி கண்ணன்(24) என்பவர் தான் அந்த மருத்துவர்.

ஸ்ரீமாலி பாலசூர்யா என்ற 7 வயது சிறுமி, இவர் இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போதே தலசீமியா என்னும் விசித்திர நோயால் தாக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீமாலியின் பெற்றோர் தமது மகளை காப்பாற்றும் பொருட்டு முயற்சி செய்யாத வைத்தியம் இல்லை. மகளின் நோய் காரணமாக ஸ்ரீமாலியின் தாயார் நில்மினி தமது ஆசிரியர் பணியையும் துறந்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீமாலியின் தந்தை ஜயந்தாவுக்கு இத்தாலிய மருத்துவர் ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது. அவர் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவர் சுனில் பட் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவரது ஆலோசனையின் பேரில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா சென்ற ஜயந்தா குடும்பத்தினர் ஸ்டெம் செல் தானம் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் AIMS மருத்துவமனையில் ஜூனியராக பணியாற்றி வந்த மருத்துவர் கண்மணி கண்ணனுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் ஸ்டெம் செல் தானம் பெறுவதற்கான அழைப்பு ஒன்று வந்துள்ளது எனவும், தானம் பெறுபவர் தலசீமியா நோயால் அவதிக்கு உள்ளாகிவரும் 6 வயது சிறுமி எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவ மாணவியாக இருக்கும் போது கண்மணி கண்ணன் ஸ்டெம் செல் தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு அன்றைய தினமே ஸ்டெம் செல் தானம் தருவது குறித்து தமது பெயரையும் பதிவு செய்துள்ளார்.

ஸ்டெம் செல் தானம் தொடர்பில் தொலைபேசி அழைப்பு வந்ததும் உணர்ச்சிவசப்பட்ட மருத்துவர் கண்மணி,

இந்த நாள் வரையில் 2013 ஆம் ஆண்டு முதல் குறித்த ஸ்டெம் செல் தான பதிவு அட்டையை தன்னுடனே எடுத்துச் சென்று வந்ததாகவும், ஆனால் அதற்கான சரியான தருணத்தை உரிய நேரத்தில் கடவுள் தற்போது காண்பித்துள்ளார் என்றார் மருத்துவர் கண்மணி.

ஆனால் தாம் ஸ்டெம் செல் தானம் தருவதை முதலில் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார். கடைசியில் தமது முடிவை பெற்றோருக்கு தெரியப்படுத்தியதும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கண்மணியின் சகோதரர் அவரது முடிவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தமது மகளின் உயிரை காப்பாற்றிய நபரை சந்திக்க விரும்பிய ஜயந்தா குடும்பத்தினர் கொச்சியில் நடந்த விழா ஒன்றில் முதன் முறையாக மருத்துவர் கண்மணியை சந்தித்துள்ளனர்.

குறித்த விழாவில் ஸ்ரீமாலி தமது உயிரை காப்பாற்றிய மருத்துவர் கண்மணியை முத்தங்களால் திக்குமுக்காட செய்துள்ளார்.

மட்டுமின்றி விழா முடிவடைந்த பின்னரும் கண்மணியின் பின்னாடியே சுற்றித் திரிந்த ஸ்ரீமாலி, நெருக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

மருத்துவர் கண்மணி மட்டும் தமது மகளுக்கு வாழ்வளிக்கவில்லை என்றால் அவரது நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கும் என்ற ஜயந்தா,

சமீப காலமாக தலசீமியா நோயால் பலர் இலங்கையில் அவதியுற்று வருவதாகவும் பலர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குடும்ப உறுப்பினரல்லாதவர்கள் ஸ்டெம் செல் தானம் செய்ய முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அதுவும் சாத்தியமாகியுள்ளது என்றார்.

Latest Offers