திருகோணமலை வளாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நியாயமற்றது

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் முகாமைத்துவ பீடத்தின் ஒரு சில மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது என திருகோணமலை வளாக முதல்வர் வி.கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று திருகோணமலை நகரில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

திருகோணமலை வளாக மாணவர்களுக்கு கூடிய வசதி வாய்ப்புக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மாணவ விடுதி, நூலகம் உள்ளிட்ட பல வசதி வாய்ப்புகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்று குறித்த சில மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வித அனுமதியுமின்றி நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைகழக மாணவர்களால் நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நியாயமற்றது. அவர்களது கோரிக்கைகள் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது.

மேலும், அது தொடர்பில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து பாரக்க முடியும். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.