பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Report Print Aasim in சமூகம்

பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கிராமியப் பொருளாதார அலுவல்கள் மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று மாலை அவரது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், பசும்பால் பருகுவது ஆரோக்கியத்துக்குப் பெரும் உறுதுணையாக இருந்தாலும் பசும்பால் நுகர்வு தற்போதைக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக பசும்பால் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் செயற்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கல்வியமைச்சுடன் இது தொடர்பாக விரைவில் கலந்துரையாடி இணக்கப்பாடு ஒன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரம்பத்தில் தேசியப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் படிப்படியாக ஏனைய பாடசாகைளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயமுனி சொய்சா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.