நுண் நீர்ப்பாசன முறைமை விவசாயிகளுக்கு அறிமுகம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

விவசாய ஊக்குவிப்புச் செயற்றிட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச விவசாயிகளுக்கு நுண் நீர்ப்பாசன முறைமை தொடர்பாக அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் நிந்தவூர் விவசாயப் போதனாசிரியர் சஜிகலா ரகுந்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தண்ணீர் விரையத்தைக் கட்டுப்படுத்தி வினைத்திறனுடனான நீர்ப்பாசனத்தை முன்னெடுத்தல் இப்புதிய பொறிமுறையின் நோக்கமாகும்.

குறித்த முறைமையின் கீழ் அளவான தண்ணீர் போதுமானதுடன், தண்ணீர் வீண் விரையமாவதில்லை என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நிகழ்வின்போது, விவசாய உதவிப்பணிப்பாளர் அழகுமலர் ரவீந்திரன், திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.