கண்டி வன்முறை குறித்து ஆராய திடீரென இலங்கை வந்த பேஸ்புக் குழு

Report Print Vethu Vethu in சமூகம்

பேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக தகவல் பரப்பப்பட்டமை காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றசாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக விசேட குழு, இலங்கை வந்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலக பிரதிநிதிகள் மூவரே இவ்வாறு வருகைத்தந்துள்ளனர்.

இந்த பிரதிநிதிகள் குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்துள்ளனர்.

பேஸ்புக் பிரதிநிகள் குழு, நாட்டில் தொழில் முனைவோர்களுக்காக விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளனர்.