முள்ளிவாய்க்கால் நிகழ்வை குழப்ப பொலிஸார் வியூகம்?

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடமாகாணத்தில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நிகழ்வை குழப்ப பொலிஸார் புது வியூகம் ஒன்றை வகுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவுகள் நடைபெற இருக்கும் 18, 19 திகதிகளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் விளையாட்டுக்களை நடாத்துவதற்கு வன்னி பிரதி பொலிஸ் மா காரியாலயத்தின் கீழ் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வானது ஒரு இன அழிப்பின் அடையாளமாகவும் தங்களது இறந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வாக தமிழ் மக்கள் அனுஸ்டித்து வரும் நிலையில் அத்தினத்தில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவது தமிழ் மக்களினை கவலையடைய செய்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் நகரசபை மைதானத்தை பார்வையிட்டு ஒழுங்கமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.