எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்! கொழும்பில் தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

Report Print Sujitha Sri in சமூகம்

சைட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று கொழும்பில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

சைட்டம் மருத்துவக்கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி களனி பல்கலைக்கழத்திற்கு அருகிலிருந்து குறித்த பேரணி ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் கொழும்பு - கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பேரணியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை சென்ற நிலையில் அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்த போதும் அதற்கு சாதகமான பதில் கிடைக்காமையால் ஆணைக்குழுவிற்குள் பிரவேசிக்க மாணவர்கள் முயற்சி செய்த போது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.