பணிப் பகிஷ்கரிப்பில் ஊவா மாகாண தாதியர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஊவா மாகாணத்தின் அரச வைத்தியசாலைகளில் அரசாங்க தாதியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரையில் பணிபகிஷ்கரிப்பு போராட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவரும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசாங்க தாதியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் அரச சலுகைகள் நேர்த்தியான முறையில் கிடைக்கப்பெறாமை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், வெலிமடை வைத்தியசாலையிலும் இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதுடன், வைத்தியசாலையின் வளாகத்தில் தாதியர்கள் பாதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

எனவே இதற்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டதோடு, அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடபோவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் கூறியுள்ளனர்.