இலங்கை மின்சார சபை உத்தியோகத்தரொருவர் கைது

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கை மின்சார சபை உத்தியோகத்தரொருவர் நேற்று மாலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபையின் நிகவரெட்டிய பிரதேச அலுவலகத்தில் பணியாற்றும் குறித்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹர பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரொருவரின் வியாபார நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பதற்காக அவர் இந்த பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த உத்தியோகத்தர் குருணாகல், ரத்தலிய சந்திப் பிரதேசத்தில் வைத்து இலஞ்ச பணத்தை பெற்றுக் கொள்ளும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.