முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க தடை உத்தரவு

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்ல வளாகத்தில் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நினைவஞ்சலி அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்ருந்தது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

கடந்த வருடம் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டால் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொலிஸார் தொடுத்த வழக்கினை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.