தெமட்டகொடை வீடமைப்புத்திட்டம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

Report Print Aasim in சமூகம்

தெமட்டகொடை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டமொன்று இன்று அதன் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந்தத் தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தில் சுமார் 437 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் வாழும் வசதி குறைந்த மக்களுக்காக வீடமைப்புத்திட்டங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் ஒருபகுதியாகவே இன்றைய குடியிருப்புத் தொகுதி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவகவின் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த வீடமைப்புத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.

1738 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத்திட்டத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.