ஹட்டன், குடாகம பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தைகள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணத்தினால் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் வரமுடியாத அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமது வீட்டு செல்லப்பிராணிகளை இரவு நேரங்களில் சிறுத்தை அடித்து கொன்றுவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர், அவர்கள் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக சில காலங்களுக்கு சிறுத்தைகளின் நடமாட்டம் இல்லாதிருந்த நிலையில், தற்போது மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருவதாக குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சிறுத்தைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.