கிளிநொச்சி கண்டாவளையில் புதையல் - அகழ்வுப் பணி ஆரம்பம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன்கட்டுப் பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவுப் பொலிசார், இன்று குறித்த இடத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பகல் 1.00 மணியளவில் குறித்த அகழ்வுப்பணி நீதிமன்ற பதிவாளர் மற்றும் கிராம சேவையாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வுப்பணியில் ஈடுபட்ட பைக்கோ இயந்திரம் பழுதடைந்த நிலையில் குறித்த பணி சில மணி நேரம் இடைநிறுத்தப்பட்டு மற்றொரு இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.