தந்தையின் வாகனத்தில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி!

Report Print Suman Suman in சமூகம்

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது மகள் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தந்தை, காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் போது தனது மகளையும் (சுகந்தன் துசாந்தினி ) முன்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கிவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.

அவ்வாறே நேற்றுக் காலை வீட்டிலிருந்து வானில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை முன்பள்ளியில் மகளை இறக்கி விட்டுவிட்டு வாகனத்தை திருப்பிய போது வழமைக்கு மாறாக மகள் வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக முன்பள்ளிக்கு நுழைவதற்கு எத்தணித்த போது வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.

உடனடியாக தந்தை மகளை செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து அவசரமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அதீ தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், வைத்தியர்களால சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

விபத்துக்குள்ளான சிறுமி இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

உயரிழந்த சிறுமி அவர்களின் ஒரேயொரு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் அந்த பிரதேசத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.