ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்கவில்லை! மறுக்கும் பொன்சேகா

Report Print Ajith Ajith in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்பு கோரவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடியதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரையும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சந்தித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதியை அமைச்சர் பொன்சேகா சந்தித்து மன்னிப்பு கோரியதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின.

அவ்வாறான செய்திகளை நிராகரிப்பதாகவும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.