மட்டக்களப்பில் எரிபொருட்களை பதுக்கும் பெற்றோலிய நிலையங்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு நகரில் உள்ள பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் பதுக்கப்படுவதாக பாவனையாளர்களினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் இல்லையென்ற அறிவிப்பு பலகையிடப்பட்டு பெற்றோல் பதுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்புகொண்டு வினவியபோது,

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும், அவர்கள் அது தொடர்பான நடவடிக்கையெடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.