காத்தான்குடி நகர வியாபார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Rusath in சமூகம்

காத்தான்குடியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு காத்தான்குடி நகர சபையும், வர்த்தக சங்கமும் இணைந்து முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிவித்தல் இன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காத்தான்குடி நகர சபையும், வர்த்தக சங்கமும் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக 100 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட காத்தான்குடி நகர பிரதேசத்தில் ஊரின் கலாச்சாரத்தையும், மார்க்க கௌரவத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தினமும் ஐவேளைத் தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் உணவகங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், சலவைத் தொழில், சிகை அலங்கார நிலையங்கள் என்பன பகல் 11 மணிக்குப் பூட்டப்பட வேண்டும்.

இதேவேளை, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் வெள்ளிக்கிழமை தினத்தில் முற்றாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதை வர்த்தகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் காத்தான்குடி நகர சபையும், வர்த்தக சங்கமும் இணைந்து அறவித்துள்ளது.

எனவே அன்றைய தினத்தில் வர்த்தக நிலைய தொழிலாளர்களின் விடுமுறை ஓய்வை அனுபவிக்க சந்தர்ப்பம் அளித்து அனைவரினதும் உடல், உள ஆரோக்கியத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் பேணிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.