சிங்கப்பூர் உடனான வர்த்த உடன்படிக்கைக்கு எதிராக வழக்கு

Report Print Aasim in சமூகம்

இலங்கை - சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்புக்கு முரணான வகையில் குறித்த வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்துள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவையின் அங்கத்தவர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த உடன்படிக்கை காரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்கள் இலங்கை வந்து தங்கள் தொழில்களை இங்கு மேற்கொள்ளலாம்.

அதன் மூலம் இலங்கையருக்கான தொழில்வாய்ப்புகளில் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும் என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.