வவுனியாவில் சர்சையை ஏற்படுத்தியிருந்த காணி விவகாரம்: பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் சர்ச்சைக்குரிய பிரச்சினையான பாரதிபுரம் விக்ஸ்காடு பகுதியில் அமைந்துள்ள காணி பிரச்சினைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிற்கு இஸ்லாமியர்கள் உரிமை கோரி, அக்காணியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு குறித்த பகுதியில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்பை காட்டி தடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் குறித்த காணியை கைப்பற்றும் நோக்கில் JCB கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்ட போது அப்பகுதி வாழ் தமிழ் மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த வியடத்தில் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினர் அதிரடியாக களமிறங்கி, குறித்த காணி தமிழ் தெற்கு பிரதேச சபைக்கு உரித்தான காணி என்று பதாதையை இட்டுள்ளனர்.

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) தலைமையில் உபதவிசாளர் மகேந்திரன் ஆகியோருடன் கட்சி வேறுபாடின்றி ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளித்ததுடன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பதாதையை இட்டுள்ளனர்.