நடுவீதியில் வீசப்பட்ட முதியவர் யார்: உறவினர்கள் எங்கே?

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவில் பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் கொண்டுவந்து வீசப்பட்ட முதியவர் யார்? என்பது இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் இன்று வைத்தியசாலைக்குச்சென்று அவரது உடல்நிலை முன்னேற்றம் பற்றியும், அவரை யாராவது தேடி வந்தனரா என்பது தொடர்பாகவும் வினவினார்.

இன்னும் சுயநினைவின்றிய நிலையிலிருப்பதால் அவரை மேலதிக சிகிச்சைக்காக உயர்வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்து முதியவர் வீதியில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் நேற்று 1.40 மணியளவில் காரைதீவில் இடம்பெற்றுள்ளது. அவர் வாயைத்திறந்து கதைப்பதாயில்லை. ஆனால் ஒரேயொரு வார்த்தையை மட்டும் பேசுகின்றார்.

சாப்பாடு, சாப்பாடு என்று மட்டும் கூறுகின்றார். இந்நிலையில், குறித்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் காரைதீவு வைத்தியசாலைக்கு வந்து அடையாளம் காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.