போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவம்! ஏற்றுக்கொள்ளும் இலங்கை இராணுவ தளபதி

Report Print Vethu Vethu in சமூகம்

சர்வதேச ரீதியாக போர்க்குற்றசாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் "வெளிநாட்டு நடவடிக்கைகளின் இயங்குநரகம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவுக் கூட்டுறவு சங்கத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவ தளபதி லெப்டினென்ட் மஹேஷ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இராணுவம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மேற்குலக நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் என்பன, போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றது.

இலங்கைக்கு உலகளாவிய அதிகார வரம்பு விரிவாக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்திருந்தார்.

சர்வதேச ரீதியாக இராணுவத்திற்கு போதுமான ஆதரவு இல்லை. இராணுவத்தினரை அவசரகால குற்றச்சாட்டுகளின் பின்னணியில் காப்பாற்றுவதற்காக ஒரு அமைப்பு அல்லது ஒரு சிந்தனை நிறுவனத்தை வைத்திருப்பது அவசியம் என்று இராணுவம் கருதுவதாக இராணுவ தளபதி லெப்டினென்ட் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இது பாதுகாப்பு உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நடவடிக்கைகளின் இயங்குநரகம் ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடன் இணைந்த நடவடிக்கையாக ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் போர்க்குற்றம் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் எதிரானவர் அல்ல எனவும், இராணுவத்தினர் மீதுள்ள அவ்வாறான பெயரை அழிப்பதற்கு இராணுவத்தினர் செயற்படுவதாக ஜெனரல் கூறியுள்ளார்.

இராணுவம் எந்த வெளிநாட்டவர்களிடமும் எந்தவொரு மீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றால் எந்தவொரு விசாரணைக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான போர் விதிகளை மீறிய போதிலும் எந்தவிதமான மீறல்களும் இடம்பெறவில்லை என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில இராணுவத்தினர்கள் குற்றங்களைச் செய்திருக்கலாம், அதற்கு முழு இராணுவத்தையும் குற்றப்படுத்த முடியாதென இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers