சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான பம்பரகந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலாப் பயணிகள் அருகில் சென்று பார்வையிட முடியாது என ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஊடாக நீர்வீழ்ச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றைய தினம் மேலும் கூறுகையில்,

பண்டாரவளை, பதுளை, ஹல்துமுல்ல போன்ற பகுதிகளில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்கிறது.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம்.

குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும். இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.