தமிழர்கள் அழியும் போது நிமல்கா எங்கிருந்தார்? காணாமல் போனோரின் உறவுகள் காட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழர்கள் அழியும் போது நிமல்கா பெர்ணான்டோ எங்கிருந்தார் என வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளோடு இணைந்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மன்னார் சென்று குறித்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் நேற்று மாலை வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளானர்.

காணாமல் போனோர் அலுவலகத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் அதில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளனர்.

காணாமல் போனோர் என்று யாரும் இல்லை என்று ஜனாதிபதி முன்னர் கூறி இருந்தார். பின்னர் இந்த அலுவலகத்தை அமைத்துள்ளார்.

எமது பிள்ளைகள் உண்மையில் இல்லை என்றால் இதனை அமைக்க வேண்டிய தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.