ஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.

Report Print Yathu in சமூகம்

​தான் வாழ்ந்த சமூகத்திற்கு சிறப்பாக பணிகளை ஆற்றிய ஒரு அற்புத மனிதனை, நெடுந்தீவு மண் மட்டுமல்ல தமிழினமே இழந்து நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 09ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்த நெடுந்தீவு பிரதேச சபையின் உப தவிசாளர் சன்முகம் லோகேஸ்வரனின் இறுதி வணக்க நிகழ்வு அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சமூகத்திற்கு சிறப்பான பணிகளை ஆற்றிய ஒரு அற்புத மனிதனை, நெடுந்தீவு மண் மட்டு மல்ல தமிழினமே இழந்து நிற்கின்றது.

இவரின் சேவைகள் மிக அழப்பரியது. தழிழீழ விடுதலைப் போராட்டத்திலும் தழிழ் மக்களின் உரிமைகளுக்கும் உழைத்த ஒருமனிதன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில், விந்தன் கனகரத்தினம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.