கனடா வாழவைப்போம் அனுசரணையில் இரணைதீவு மக்களுக்கு கிடுகுகள் வழங்கிவைப்பு

Report Print Dias Dias in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஒழுங்கமைப்பில் 'கனடா வாழ வைப்போம் அமைப்பினர்' இரணைதீவு மக்களுக்கு தற்காலிகக் கொட்டகை அமைப்பதற்காக கிடுகுகளை வழங்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வு, இன்று இரணைமாதநகரில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைய குறித்த அமைப்பு இவ்வுதவியை வழங்கியுள்ளது.

இதேவேளை, கிடுகுகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான பிரதிநிதிகள் மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன்,பூநகரி பிரதேச உபதவிசாளர் ஸ்ரீரஞ்சன்,பிரதேச சபை உறுப்பினர்களான எமிலியாம்பிள்ளை,வீரவாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.