நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன தந்தையொருவர் சடலமாக மீட்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

கம்பளை - மரியாவத்தை, பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன நபரொருவர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

79 வயதான குறித்த நபர் இன்று காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 4 பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.ஜெயசேன என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆற்றில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.

அதன்பின் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இது கொலையா, தற்கொலையா என பலகோணங்களில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.