வவுனியா பிரதி விவசாயப்பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு வடக்கு முதலமைச்சருக்கு அவசரக்கடிதம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்டத்தின் பிரதி விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரனின் முறையற்ற இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் க. சிவநேசன் ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, ஜி.ரி. லிங்கநாதன், இ.இந்திரராசா ஆகியோர் கையெழுத்திட்டு இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில்,

தற்போது வவுனியா மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளருக்கு மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

இவரின் இடமாற்றத்தினால் வவுனியா மாவட்ட விவசாயத்துறைசார் அபிவிருத்தி பாதிக்கப்படுமென பல விவசாய அமைப்புக்கள் தங்களிடம் முறையிட்டுள்ளன.

ஏற்கனவே கஸ்ட்டப் பிரதேசத்தில் கடமையாற்றியவர் என்ற வகையிலும் வவுனியா மாவட்ட விவசாயத்தைப் பாதிக்காத வகையிலும் இவர் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.