கீத் நொயார் கடத்தல் தொடர்பில் சபாநாயகரிடம் விசாரணை

Report Print Kamel Kamel in சமூகம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கரு ஜயசூரியவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் வைத்து இந்த விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீத் நொயார் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அது குறித்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, கரு ஜயசூரியவே முதலில் தகவல்களைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட காலத்தில் கரு ஜயசூரிய பொதுநிர்வாக அமைச்சராக கரு ஜயசூரிய கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றது உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து கரு ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.