வவுனியா, மன்னார் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் இடம்பெற்றது.

வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்றுவருகின்றது.

இதன்போது, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட 212 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், நிதிமூலங்கள் மற்றும் அதன் கையாளுகை, அதன் அதிகாரங்களை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த செயலமர்வில், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், அதன் செயலாளர்கள், வடமாகாண கணக்காய்வு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.