இலங்கை வந்த மற்றுமொரு பிரித்தானியர் மரணம்! கொலையாக இருக்கலாம் என சந்தேகம்?

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கைக்கு வருகை தந்திருந்த மற்றுமொரு பிரித்தானிய வீரர் மரணமடைந்துள்ளமை பெரும் சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய ரக்பி விளையாட்டு கழக வீரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தள்ளார்.

27 வயதான தோமஸ் ரீட் என்ற ரக்பி வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்துள்ளார் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதே அணியை சேர்ந்த மற்றுமொரு வீரர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரின் பரிசோதனைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

மூச்சுத்தினறல் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக முன்னர் கூறப்பட்டது. பின்னர் அதிக மது அருந்தியமையினால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இரு வீரர்களின் மரணத்திற்கும் உரிய காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்த வீரரின் சடலம் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை காரணங்கள் கண்டுபிடிக்கப்படமையினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.