அரசின் செயற்பாட்டால் நாளை ஸ்தம்பிதம் அடையவுள்ள இலங்கை!

Report Print Vethu Vethu in சமூகம்

தனியார் பேருந்துகள் நாளை நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாம் கோரிக்கை விடுத்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கவில்லை.

மாறாக பேருந்து கட்டணத்தை 6.56 வீதமாக அதிகரிக்கவும், ஆரம்பக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பேருந்துக் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் தமது கோரிக்கைக்கு அமைவாக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.